விமல் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகராவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பனங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்ததால் படிப்பை விட்டு விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்தார் விமல். சென்னை வந்த விமல் நடனம் கற்க தொடங்கினார் பின்னர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து முறையாக நடிப்பை கற்றார் விமல்.
கூத்துப்பட்டறையில் நடிப்பை பயின்று கொண்டு இருக்கும் போதே விமல் கில்லி, கிரீடம், குருவி போன்ற பல திரைப்படங்களில் பின்னணி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விமல்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விமல் அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு களவாணி என்ற நகைச்சுவை காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டாகி விமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் உள்ள காமெடி காட்சிகள் அனைத்தும் வெகுவாக பாராட்டப்பட்டது.
அடுத்ததாக தூங்கா நகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் விமல். தொடர்ந்து தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம், மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் விமல்.
தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் சார் என்ற திரைப்படம் ரிலீஸாக தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் நடிகர் விமல் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் கஷ்டப்படுறவங்கள கை கொடுத்து தூக்கி விடுவது ஒரு சில பேரு. அதுல வெற்றிமாறன் சாரும் விஜய் சேதுபதியும் முதலாவதாக இருக்காங்க. அவங்கள மாதிரியே நானும் ஒரு சில பேரை கை கொடுத்து தூக்கி விட்டேன். ஆனால் அவர்கள் என் காலை பிடித்து வாரி விட்டுட்டாங்க என்று ஓபனாக பேசியிருக்கிறார் விமல்.