இந்த அளவுக்கு ஜி.வி. பிரகாஷை சைந்தவி காதலிச்சாங்களா.. ரசிகர்களை கலங்க வெச்ச தகவல்..

GV Prakash Kumar – Saindhavi : ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த அறிக்கை ஒரு நிமிடம் நிலைகுலைய தான் வைத்திருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக…

gv prakash saindhavi

GV Prakash Kumar – Saindhavi : ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஜிவி பிரகாஷ் பகிர்ந்த அறிக்கை ஒரு நிமிடம் நிலைகுலைய தான் வைத்திருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், இசையைத் தாண்டி தற்போது நடிகர் அவதாரமும் எடுத்து வருகிறார்.

டார்லிங், பென்சில் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நடிகராக கால் பதித்த ஜி. வி. பிரகாஷ் குமார் தற்போது கள்வன், டியர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ஜிவி பிரகாஷ் குமார், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தனது பள்ளிப் பருவத்தில் இருந்து தான் காதலித்து வந்த பிரபல பாடகி சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர்களின் காதல் எந்த அளவிற்கு உணர்வுடன் இருந்தது என்பதை இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய பல்வேறு பாடல்கள் மூலமும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அவர்களின் பாடல்களை கேட்கும் எந்த தம்பதிகளும் கூட ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போகும் அளவிற்கு இருவரின் குரல்களும் வசீகரம் நிறைந்திருந்தது. பாடலிலும், வாழ்க்கையிலும் இணை பிரியாத தம்பதிகளாக இருந்த இவர்கள் தான் சமீபத்தில் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதில் நிச்சயம் உண்மை இருக்காது என ரசிகர்கள் நம்பி வந்த நிலையில் தான் தாங்கள் பிரிந்து விட்டதாக ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார். உண்மையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது பற்றிய தகவல் அறிந்ததும் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் பதறிப் போனது மட்டுமில்லாமல் இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றும் குழம்பி போயினர்.

ஏறக்குறைய 20 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், இப்படி முடிவு எடுத்திருக்க கூடாது என்றும் பலர் குறிப்பிட்டு வரும் நிலையில், அவர்களின் பழைய வீடியோக்கள் ஏராளம் வைரலாகி வருகிறது. அதில் தனது முன்னாள் மனைவி சைந்தவி பற்றி ஜிவி பிரகாஷ் குமார் பேசிய கருத்து பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இதில் ஒரு நேர்காணலில் ஜிவி பிரகாஷ் தெரிவித்த கருத்தின்படி, ஜூன் 27, 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். அப்படி திருமணம் ஆன நாளிலிருந்து அடுத்தடுத்த மாதங்களில் 27 ஆம் தேதி வரும் போதெல்லாம் காதல் நிறைந்த பரிசுகளை ஜிவி பிரகாஷுக்கு பரிசாக அளிப்பதையும் சைந்தவி வழக்கமாக வைத்திருந்ததாகவும் ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதி வந்துவிட்டாலே அது சைந்தவியின் சர்ப்ரைஸாக தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“Monthiversary” என்ற பெயரில் தனது காதல் கணவனுக்கு இப்படி பரிசு கொடுத்து வந்த மனைவி சைந்தவியை ஜி. வி. பிரகாஷ் குமார் பிரிந்து பல மணி நேரம் ஆனாலும் எதற்காக இப்படி நடந்திருக்கும் என்பது தான் ரசிகர்களை ஓய விடாமல் யோசிக்க வைத்து வருகிறது.