கமலுக்கு கோபம் வந்தால் என்ன செய்வார் என்று தெரியுமா? கௌதமிக்கு மட்டும் தெரிந்த இரகசியம்!

Published:

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி,பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களிடம் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என இன்றளவும் சினிமா துறையில் முக்கிய பிரபலமாக ஜொலித்து வருகிறார். கமலுடன் பாபநாசம் படத்திற்கு பிறகு கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இவர் 1998ம் ஆண்டு சந்திப் பாட்டியா என்னும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து, அடுத்த ஆண்டே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு சுபலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அடுத்ததாக 2004ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர் 2016ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஜெயிலரை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்களில் களமிறங்க போகும் ரஜினி!

முன்னதாக கமல், கௌதமி ஒன்றாக வாழ்ந்து வந்த காலத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது விஸ்வரூபம் படம் வெளியாவதில் பல சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை குறித்த தகவல்கள் கமலை வந்தடையும் போது கௌதமி அவர் அருகில் இருந்தார். அப்போது பிரச்சனைகள் குறித்த கோவத்தில் தான் தனியாக எனது அறையில் சென்று படுத்து உறங்கி விடுவேன் என கூறியுள்ளார்.

கமல் தனக்கு அதிக பிரச்சனையும், குழப்பமும், கோபமும் வரும் பொழுது உடனே அறைக்குள் சென்று தூங்கி விடுவேன். இந்த விஷயம் கௌதமிக்கு மட்டும் தான் தெரியும் என கமல் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...