ஜெயிலரை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்களில் களமிறங்க போகும் ரஜினி!

தன்னுடைய 72வது வயதிலும் மாஸ் ஹீரோவாக தென்னிந்திய திரையுலகையே ஆட்டி படைத்து வரும் ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் மவுசு அதிகரிக்கத் தான் செய்கிறது. அதனால் தான் ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினி குறித்த பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்று நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் தான் ரஜினியின் இறுதி படமாக இருக்கும் என பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள் இனி தலைவரை திரையில் பார்க்க முடியாதோ என வருத்தத்துடன் புலம்பியும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்ற உறுதியான செய்தி கிடைத்துள்ளது.

அதாவது ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டுள்ள ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டாரா என்னும் கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ரஜினிகாந்த் அண்ணன் இதெல்லாம் உண்மையே கிடையாது, அவர் தொடர்ந்து இன்னும் 10 படங்களில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதில் முதல் 5 படங்களின் கதையை கேட்டு முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த 5 படத்திற்கு கதை கேட்டு வருவதாகவும் அந்த கதை இறுதியாகும் பட்சத்தில் ரஜினி அடுத்தடுத்து 10 படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்ட அஜித்! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சம்பவம்!

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளனர். இதில் இருந்து ரஜினியின் இறுதி மூச்சு இருக்கும் வரைக்கும், அவர் தமிழ் சினிமாவுக்காக ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இனிமே இவருக்கு போட்டி இவர்தான், இவரை வேற யாராலும் அசைக்கவே முடியாது. இவர் இடத்திற்கு வேறு யாருமே வர முடியாது என ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews