மலேசியாவுக்கு படமெடுக்கும் தமிழ் சினிமா: ஒரு ஆச்சரிய தகவல்

By Staff

Published:


0fa1b9c3bec3d1a022a99eee263fb1f3

பிரம்மாண்டமான தமிழ் சினிமாக்கள் அதிகம் மலேசியாவில் படமாக்கப்பட்டு வருவது தெரிந்ததே, ஏற்கனவே பில்லா, கபாலி உள்பட பல திரைப்படங்கள் மலேசியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனை அடுத்து விஷால் நடிப்பில் ’அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாம்

மேலும் சரவணபவன் அண்ணாச்சி அருள் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க இருப்பதாகவும் மலேசியாவில் ஒரு பிரமாண்டமான பாடல் காட்சி படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க உள்ளதாம் ஒரே நேரத்தில் நான்கு தமிழ் திரைப்படங்கள் மலேசியாவில் நடக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment