பொழுதுபோக்கு

நான் இதுக்காக தான் சோசியல் மீடியாவில் இருப்பதில்லை… அஜித்குமார் ஓபன் டாக்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

தற்போது அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெற்றிருக்கிறார். அதை தொடர்ந்து ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலில் தான் ஏன் சமூக வலைதள பக்கங்களை உபயோகப்படுத்துவதில்லை என்பதை பற்றி விளக்கி கூறியிருக்கிறார். அஜித்குமார் கூறியது என்னவென்றால், நான் ஒரு பிரைவேட்டான நபர் தனிமையை விரும்பும் நபர். தேவையில்லாமல் என்னுடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மற்றவர்களின் கவனத்தை என் மீது திசை திருப்ப நான் விரும்பவில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் அஜித்குமார்.

Avatar photo
Meena