லொள்ளு சபா மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம். சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து காமெடி செய்தார்.
திடீரென காமெடியில் இருந்து விலகி ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன் என தனி ஆவர்த்தனமாக பல படங்களில் காமெடி ஹீரோவாக நடித்தார் சில படங்கள் வெற்றியும் பெற்றது.
பெரும்பாலும் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை இவர் தயாரிக்கவும் செய்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் புதியதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். டிக்கிலோனா என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட், செகண்ட் லுக்குகள் வெளியான நிலையில் இப்படத்தின் தேர்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.
சந்தானத்துடன் யோகிபாபுவும் இணைந்து இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் முதல் முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தின் தேர்ட் லுக் இதோ.