பிரபல கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணி பாடகரும் இசைமேதையுமான பாலமுரளிகிருஷ்ணாவையே இசைஞானி தனது இசையால் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார். அது கவிக்குயில் படம். சிவக்குமார், ஸ்ரீதேவி நடித்த இப்படத்தில் வரும் சின்னக்கண்ணன் அழைக்கின்றான் பாடலுக்கு அடிமையாகாத இசை ரசிகனே இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு தனித்துவம் இப்பாடலில் நிறைந்திருக்கும்.
இப்பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா கூறுகையில், “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே. ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக் கொண்டார். “என்ன ட்யூன்?” என்றார். பாடிக்காட்டினேன்.
ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான், “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” என்ற பாட்டு. பாடலைப் பாடியவர், “இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை-அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!
சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே” என்று மனம் விட்டுப் பாராட்டினாராம் இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா.
மேலும் சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா கிட்டத்தட்ட 25,000 இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருக்கிறார். மேலும் தமிழில் இவர் பாடிய ஒருநாள் போதுமா, சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்ற பாடல்கள் இன்றும் எவர்கீரின் வரிசையில் பாலமுரளி கிருஷ்ணாவை நினைவில் நிறுத்திக் கொண்டே இருக்கும்.
இசையமைப்பாளர்களுக்கு இசையில் ஏதேனும் சந்தேகங்கள், ராகம் இயற்றுவதில் சந்தேகம் இருந்தால் உடனே தொடர்பு கொள்வது இந்த சங்கீத மேதையைத்தான். பாடகராக மட்டுமின்றி ஆதி சங்கராச்சாரியா, இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இந்த சங்கீத சக்கரவர்த்தி.
பழம்பெரும் நடிகைகள் வைஜெயந்தி மாலா, ஜெயலலிதா போன்றோரும் உலக நாயகன் கமல்ஹாசன், எஸ்.பி. ஷைலஜா போன்றோரும் இவரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
