சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!

தமிழ் சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடிப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம்தான். எம்ஜிஆர் சிவாஜி காலம் தொட்டு அவர்களுக்குள் தொழில் போட்டி இருந்தாலும் கதையின் முக்கியத்துவம் கருதி இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த படம் தான் கூண்டுக்கிளி.

அதேபோல் இவர்களுக்கு அடுத்து வந்த ரஜினி கமலும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தில்லுமுல்லு, அபூர்வராகங்கள், ஆடுபுலிஆட்டம், நினைத்தாலே இனிக்கும்  போன்ற சில படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதற்குப் பிறகு வந்த விஜய்-அஜித் ஆகிய உச்ச நட்சத்திரங்களும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

இதன்பின் விக்ரம் சூர்யா இருவரும் பிதாமகன் படத்தில் இணைந்து நடித்தனர். இவ்வாறு ஒவ்வொரு உச்ச நட்சத்திரமும் தனது சக நடிகரை போட்டியாளராக கருதாமல் கதைக்கு ஏற்றவாறு இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இந்த வரிசையில் இணைந்திருக்கின்றனர்.

20 வருடத்தில் 80 படங்களைத் தொட்ட லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா?

இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது என்பது உறுதியாகிவிட்டது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ் இந்த படம் முடிந்தவுடன் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களும் ரிலீசுக்கு பின் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் தனுஷ் நடிக்க உள்ளார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் சிம்புவும் இதில் இணைய உள்ளாராம்.

படத்தில் ஏ.ஆர் ரகுமான் கதாபாத்திரத்திற்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் நடிக்க அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அது மட்டுமின்றி இந்த இளையராஜா பயோபிக் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சிம்புவும் தனது 48 வது படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியுடன் கை கோரிக்கிறார். தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் கையில் இருக்கும் படங்கள் முடிந்த நிலையில் இளையராஜா பயோபிக் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் இவர்களின் காம்போவை கண்டுகளிக்க எதிர்பார்த்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews