இவ்வளவு செலவு பண்ணியும் ஒன்னும் நடக்கல… புலம்பும் ஜெமினி பட நடிகை கிரண்…

Published:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தவர் நடிகை கிரண் ராத்தோட். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த கிரண் பாப் ஆல்பங்களிலும் பணியாற்றியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு ‘யதேயின்’ என்ற இந்தி திரைப்படத்தின் வாயிலாக சினிமாவில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெமினி திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மெகாஹிட் ஆகி முதல் படத்தின் வாயிலாகவே பிரபலமானார் கிரண்.

முதல் படத்திலே அனைவரின் கவனத்தை ஈர்த்த கிரண் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. 2003 ஆம் ஆண்டு அஜீத் உடன் இணைத்து ‘வில்லன்’, அதே ஆண்டு கமலஹாசன் அவர்களுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’ ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்து புகழடைந்தார்.

பின்னர் ‘பரசுராம்’, ‘தென்னவன்’, ‘சகுனி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ‘அரசு’, ‘திருமலை’, ‘ராஜாதி ராஜா’, ‘குரு சிஷ்யன்’ ஆகிய திரைப்படங்களில் வரும் ஒரு பாடல்களில் சிறப்பு நடன தோற்றத்தில் தோன்றியுள்ளார். தனது வசீகரிக்கும் முகத்தினிலும் பார்வையினாலும் ரசிகர்களை கவர்ந்தவர் கிரண் ராத்தோட்.

இந்நிலையில், தற்போது நேர்காணல்களில் கலந்துக் கொண்டு வருகிறார் கிரண். அதில், கடந்த வாரம் பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொள்ள விரும்பியதாகவும், அதற்கான விசாவை பெறுவதற்கு விண்ணப்பித்து ஒரு மாத காலம் காத்திருந்தும் கிடைக்கவில்லை, அதற்காக 15 இலட்சம் செலவு செய்தது தான் மிச்சம் என்று புலம்பியுள்ளார் கிரண் ராத்தோட்.

மேலும் உங்களுக்காக...