அப்போது விஜய்யை பார்க்கும் போது எனக்கு இதை பண்ணனும்னு தோணல… பாரதிராஜா பகிர்வு…

Published:

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றிப் பெற்றது. இத்திரைப்படம் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோருக்கு கூட திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

கிராமப்புற மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை, உணர்வுபூர்வமாக, செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே எடுத்து காட்டுவதில் வல்லவர் பாரதிராஜா அவர்கள். பல கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர்.

அலைகள் ஓய்வதில்லை (1981), மண் வாசனை (1983), முதல் மரியாதை (1985), கடலோர கவிதைகள் (1986), கிழக்கு சீமையிலே (1993), கருத்தம்மா (1994), பசும்பொன் (1995), தாஜ் மஹால் (1999) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார், மேலும் பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார் பாரதிராஜா அவர்கள்.

தனது படைப்புகளுக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், சிறந்த இயக்குனருக்கான மாநில திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், விஜய் விருதுகள், கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் இந்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வென்றுள்ளார் பாரதிராஜா.

இந்நிலையில், தற்போது பாரதிராஜா பழைய நினைவுகள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் நானும் நாடகம் போடும் போதிலிருந்து நண்பர்கள். அவர் என்னிடம் வந்து எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்க. அதே போல் விஜய் கிராமத்து நாயகனாக உன் படத்தில் அறிமுகம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று விஜயை என்னிடம் கூட்டிட்டு வந்தார்.

ஆனால், அப்போது விஜயை பார்க்கும் போது, அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று எனக்கு தோணல. அதனால நீயும் இயக்குனர் தானே, நீயே விஜயை உன் படத்தில் அறிமுகபடுத்திக்கொள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன் என்று பகிர்ந்துள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

மேலும் உங்களுக்காக...