குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல்.. இனி எப்படி இருக்க போகுது.. இன்று புரோமோ பார்த்தீங்களா

Published:

குணசேகரன் இல்லாமல் இன்று எதிர்நீச்சல் சீரியல் புரோமோ வந்துள்ளது. மாரிமுத்து மறைவுக்கு பின்னர் அவரது கேரக்டர் இல்லாமல் முதல்முறையாக புரோமோ வந்துள்ளது. இதுவரை குணசேகரன் கேரக்டருக்கு யாரும் நடிக்காத நிலையில் இனி எப்படி சீரியல் நகரப்போகிறது என்பதை உணர்த்தும் வகையில் இன்றைய புரோமோ உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து அண்மையில அகால மரணம் அடைந்தார். அவர் இறந்த அன்றே எபிசோடில் பாதிக்கு மேல் அவரது வாய்ஸ் டப்பிங்கில் இல்லை. இந்நிலையில் நேற்று வரை மாரிமுத்து குணசேகரனாக நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகின.

இதுவரைக்கும் குணசேகரன் இல்லாத ப்ரமோ வெளிவந்தது கிடையாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தினமும் ப்ரோமோவில் குணசேகரன் இடம் பெறுவார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் கேரக்டர் இல்லை.

அவர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் டைனிங் ஹால் இருக்கை இன்று காலியாக இருந்தது. இது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய ப்ரோமோவில் ரேணுகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குணசேகரன் வீட்டில் ஒவ்வொருவருமே சுயமாக சம்பாதிக்க தொடங்கி வரும் நிலையில், ஒவ்வொரு பெண்களின் கேரக்டர்களும் இடம் பெற்று வந்தது.

நேற்று சீரியலில் ரேணுகா டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஐஸ்வர்யாவின் ஸ்கூல் டீச்சர் இரண்டு மாணவிகளை குணசேகரன் உடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவார். இது குறித்து கரிகாலனுக்கு சந்தேகம் வந்து என்ன ஏதுவென்று அடிக்கடி கேள்வி கேட்டு கொண்டிருந்தார்.

அப்போது ரேணுகா அந்த குழந்தைகளுக்கும், ஆசிரியருக்கும் பாடத்தில் டவுட்.இதை கிளியர் மகளிடம் வந்துள்ளார் என்று சொல்வார். இதை நம்பாமல் கரிகாலன் எட்டிபார்க்க வரவே, ரேணுகா கரிகாலனை மிரட்டி அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகா மாணவிகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டு டீச்சரையும் அழைத்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது ஞானம் ரேணுகாவிடம் ஐஸ் எங்கே என்று கேட்க, அதற்கு ரேணுகா என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.

அப்போது கரிகாலன் என்ன மண்டைய சொரிகிறிங்க? கைய சொடுக்கு போடுறீங்க? இங்க பாருங்க முழிய… முழியே சரி இல்ல என்று கத்தி கொண்டு இருக்க, அதைத்தொடர்ந்து ரேணுகா ஞானத்திடம் உங்களுக்கு பயந்து பயந்து எல்லாம் என்னால இருக்க முடியாது.

காலமெல்லாம் உங்க அண்ணனுக்கு கூஜா தூக்கறன்னு முடிவு பண்ணிட்டீங்கல்ல, அந்த வேலையை மட்டும் பாருங்க என்று பேச, அதற்கு ஞானம் ஏய் என்று கையை நீட்டி கத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிந்துள்ளது.

இந்த நிலையில் குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் இப்ப வரைக்கும் கமிட் ஆகாமல் இருக்கிறாக்ர்கள் நிலையில் இன்னும் ஒரு சில எபிசோடுகளுக்கு மீதம் இருக்கும் கேரக்டர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்கிறார்கள். அதே நேரத்தில் ரேணுகா டான்ஸ் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ரகசியம் இனி வீட்டில் எல்லோருக்கும் தெரிய போகிறது.

மேலும் உங்களுக்காக...