விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து உருவாக இருக்கும் எந்திரன் 3 அப்டேட் இதோ!

By Velmurugan

Published:

தமிழ் திரையுலகில் விஜய்யும், இந்தி திரையுலகில் ஷாருக்கானுக்கு தனக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் உச்ச நட்சத்திரமாக முன்னணியில் உள்ளனர். விஜய் படமும் சரி, ஷாருக்கான் படமும் சரி பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய வசூல் சாதனை படைக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தனியே இவர்களை திரையில் கண்டு ரசித்த ரசிகர்கள் பலருக்கும் இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களையும் ஒன்றாக சேர்த்து திரையில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேற போகிறது.

இந்த இரண்டு நட்சத்திர நடிகர்களின் ரசிகர்ளுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி தற்போழுது வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து அதிக செலவில் ஒரு பிரபலமான இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப் போகிறார்கள்.

மெகா பட்ஜெட் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பதில் சிறந்து விளங்கும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ரூபாய் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் அறிவியல் புனைக்கதையுடன் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

sa vi

அதிக செலவில் உருவாகும் இந்த படத்தை இரண்டு பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளது.

விஜய்யின் கல்லூரி காலத்தில் அப்படி ஒரு காதலா? மலரும் நினைவுகளை பகிர்ந்த காமெடி நடிகர்!

மேலும் ஷாருக்கான் மற்றும் விஜய் தற்போது பிஸியாக இருப்பதால் அவர்களிடம் இப்படம் குறித்து பேச்சு வார்த்தை நடந்த கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரணை வைத்து ஆர் சி15 படத்தையும் மற்றும் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் இயக்குகிறார்.

இந்த இரண்டு படங்களின் பணிகளும் நிறைவடைந்த உடன் விஜய் மற்றும் ஷாருக்கான் வைத்து படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே பாக்ஸ் ஆபிஸ் வசூல் அனல் பறக்கும். அதிலும் இந்த இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை.