விஜய்யின் கல்லூரி காலத்தில் அப்படி ஒரு காதலா? மலரும் நினைவுகளை பகிர்ந்த காமெடி நடிகர்!

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போழுது தனது லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது டப்பிங் வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக படப்பிடிப்புகளில் இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கைக்கு என தனி நேரம் கொடுப்பவர் விஜய் . அதிலும் அதிகமாக நட்பு வட்டாரத்துடன் இணைந்து லூட்டி அடிப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. அவ்வப்போது நண்பர்களை சந்திப்பது, அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவது என நட்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நபர் தான் விஜய்.

இந்நிலையில் அவர் நடிக்கும் பல படங்களில் விஜய் அவரது நண்பர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவின் தொடக்க காலத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் வரை தனது நண்பர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

விஜய்க்கு மிக நெருக்கமான நண்பர்களில் முக்கியமானவர்கள் சஞ்சீவ், ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் விஜய்யுடன் பல படங்களில் நண்பர்களாகவும், காமெடியன்களாகவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் விஜய்யின் கல்லூரி கால காதல் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஸ்ரீநாத், விஜய், சஞ்சீவ் அவர்கள் மூவரும் ஒன்றாக தான் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்ததாகவும், அந்த நேரத்தில் விஜய்க்கு அஞ்சலி என்னும் பொண்ணை மிகவும் பிடிக்கும் என கூறினார். அதை தொடர்ந்து அந்த பொண்ணை விஜய்க்கு மட்டும் இல்லாமல் முழு கல்லுரிக்கே பிடிக்கும் எனவும், அந்த அஞ்சலி அவ்வளவு அழகாகவும் கியூட்டாகவும் இருந்ததாக வர்ணித்தார்.

ஆனால் அதில் ஒரு காமெடியான விஷயம் என்னென்றால் அந்த அஞ்சலி விஜய்க்கு சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் அதையெல்லாம் பார்க்காமல் அஞ்சலியிடம் பேச ஆசைப்பட்டதாகவும் கூறினார்.

விஜய்யை பின்னுக்கு தள்ளும் அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட்கள்!

அந்த நேரத்தில் ஒரு நாள் தன்னை சீனியர்கள் ரேகிங் செய்து கொண்டிருந்தனர். அதை பார்த்த விஜய் என்னை எல்லாம் ரேகிங் செய்ய மாட்டார்களா என கூறிக்கொண்டு தானாக முன் வந்து அந்த சீனியர் அஞ்சலி இடம் பேசியதாகவும் கூறினார். அந்த சமயத்தில் இந்த நிகழ்வு மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஸ்ரீநாத் கூறினார்.

மேலும் கல்லூரி நாட்களில் வகுப்பறைகளில் இருந்ததை விட கேண்டீன், திரையரங்குகளில் அதிக நேரம் பொழுது போக்கியதாகவும் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...