பாரதிராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகம்.. ஆனா அதுக்கப்புறம் கிடைச்ச வாய்ப்புகள் எல்லாம்.. ஒரு படத்திற்கு பின்னர் அடித்த ட்விஸ்ட்!…

By Bala Siva

Published:

சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கிய சுந்தரபாண்டியன் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதிலும் லட்சுமி மேனனின் தந்தையாக நடித்து அதிக தாக்கத்தை உண்டு பண்ணி இருப்பார் பிரபல நடிகர் தென்னவன்.

இவரது சினிமா பயணம் பற்றி தற்போது காணலாம். பலருக்கும் பெரிய இயக்குனரின் படங்களில் அறிமுகமாகும் வாய்ப்பு என்பது கிடைத்து விடாது. ஆனால், நடிகர் தென்னவன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’என்னுயிர் தோழன்’. இந்த படத்தில் பாபு மற்றும் தென்னவன் ஆகிய இருவருமே ஹீரோவாக அறிமுகமானவர்கள்.

இந்த படத்தில் அறிமுகமான தென்னவன் கோவையை சேர்ந்தவர். பாரதிராஜா இவரை தனது இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகம் செய்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பிறகு அவருக்கு ஹீரோ வேடம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்கள் கிடைத்தது.

thennavan2 1

பல படங்களில் பஞ்சாயத்து தலைவர், வில்லன், காவல்துறை அதிகாரி, நாயகன் நாயகியின் அப்பா ஆகிய வேடங்களில் நடித்துள்ளார். முதல் பட வெற்றிக்கு பிறகு 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், அர்ஜுன் நடித்த ’முதல் குரல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதனை அடுத்து அவர் வேலுச்சாமி, ஜெமினி, ஜேஜே, திவான், விருமாண்டி, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ஜெமினி மற்றும் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் தென்னவன் நடித்த கதாபாத்திரங்கள், மக்கள் மத்தியில் எளிதாக அவரை கொண்டு போய் சேர்க்கவும் செய்திருந்தது.

விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்து கலக்கி இருப்பார். அதேபோல் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் செல்வம் என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார். மேலும் ஆச்சார்யா, மணிகண்டா, வைகை, இளைஞன், சதுரங்கம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பார். சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் அவர் பாண்டித்தேவர் என்ற கேரக்டரில் நாயகி அப்பாவாக நடித்திருப்பார் என்பதும் அவரது கேரக்டர் சூப்பராக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

thennavan1

கடந்த ஆண்டு வெளியான ’தில் இருந்தா போராடு’ என்ற படத்தில் நடித்த தென்னவன். திரை உலகில் மட்டும் இன்றி சின்னத்திரை உலகிலும் சில தொடர்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ஓவியா என்ற தொடரிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் அவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து தலைவர் என்ற கேரக்டரில் இவர் மிக பொருத்தமாக இருப்பார் என்பதும் அதேபோல் வில்லன் மற்றும் காவல்துறை கேரக்டரில் இவர் அசத்தலாக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...