பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஈஸியா முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுங்க!

Published:

சப்பாத்தி பிடிக்காத குழந்தையா… இந்த முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுங்க!

சப்பாத்தி பிடிக்காத குழந்தைகளுக்கு புதுசா சுவையான 10 நிமிடங்களே தயார் செய்ய கூடிய முட்டை சப்பாத்தி ரோல் செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்

முட்டை – 1

சப்பாத்தி – 5

பெரிய வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

மிளகு தூள் – 1 தேக்கராண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் ஒரு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறவும் , அந்த நேரத்தில் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து கிளறவும்,உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

பிரெட்டில் ஜாமூக்கு பதிலாக சத்தான பீனட் பட்டர்… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

அடுத்து அதை சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.

இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி. இதில் மல்லி தலை சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment