பிரெட்டில் ஜாமூக்கு பதிலாக சத்தான பீனட் பட்டர்… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிடுவதற்கு பதிலாக பீனட் பட்டரை சாப்பிடலாமே .. பீனட் பட்டரை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 2 கப்

ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் – 6 தேக்கரண்டி

உப்பு – 1 சிட்டிகை

தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை :

வறுத்த வேர்க்கடலையில் முதலில் தோலை நீக்கிவிடுங்கள். அதை கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீருக்கு பதிலாக அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.

அடுத்து அதில் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள். அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.

நெஞ்சு சளி அதிகமாக இருந்தால்… சிக்கன் சூப் குடிக்கலாம் வாங்க…

இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.