பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா…? தரமான சம்பவம் வெயிட்டிங்…

By Meena

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இது நெதர்லாண்டில் ரெண்டே மால் நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட்ட பிக் பிரதர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மறு வடிவமைப்பு ஆகும். இந்த நிகழ்ச்சியின் உரிமத்தை விஜய் டிவி 2017 ஆம் ஆண்டு வாங்கியது.

2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியை நடத்தி வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான். தற்போது சீசன் 8 இந்த வருடம் தொடங்க உள்ள நிலையில் சமீப காலத்திற்கு முன்பு கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்ததாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. நெட்டிசன்கள் சிம்பு, சரத்குமார், நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என இவர்கள் ஐந்து பேரில் ஒருவர்தான் தொகுத்து வழங்குவார் என்று பேசி வந்தனர்.

இந்நிலையில் சிம்பு, சரத்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கவில்லை என்ற தகவல் தெரிந்தது. பின்னர் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு சென்றதால் மறுபடியும் சின்னத்திரைக்கு வர விரும்பவில்லை என்று கூறியதாகவும் தகவல் பரவி வந்தது. அடுத்ததாக நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஆர்வமாக இருப்பதாகவும் இவர்கள் இருவரிடத்தும் இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.

vs2

இந்நிலையில் இன்று விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் இணைந்து விஜய் டிவி சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நடிகர் விஜய் சேதுபதி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 ஆனது ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...