அடுத்தடுத்த அப்டேட்களால் எகிற வைக்கும் தி கோட் படத்தின் எதிர்பார்ப்பு.. இப்போ என்ன அப்டேட் தெரியுமா?

Published:

தளபதி விஜய்யின் 68-வது படமான தி கிரேஸ்ட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை, கொடி அறிமுகம் என அரசியல் களமும் சூடுபிடித்திருக்கும் நிலையல் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக உருவாகியிருக்கிறது.

லியோ படத்திற்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே அனைத்துப் பாடல்களும் வெளியாகி லூப் மோடில் ரசிகர்களை வைஃப் ஆக்கியிருக்கும் நிலையில் தற்போது படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதில் தி கோட் படத்தில் விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் பாடலான விசில் போடு பாடலானது பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டடோர் நடனமாடும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் படத்தில் பாடல் இந்த ஸ்டைலில் இடம்பெறவில்லையாம். அந்தப் பாடலின் திருவிழாக் கோலமான மற்றொரு வெர்ஷன் தான் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் வாழை திரைப்படத்தினைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்து

மேலும் இந்தப் படத்தில் நடித்துள்ள வெங்கட்பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி மற்றொரு முக்கிய அப்டேட்டை கசிய விட்டிருக்கிறார். அதில் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரன் எண் என்ன தெரியுமா? CM 2026. வருகிற 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதைக் குறிக்கும் வகையிலும், அடுத்த முதல்வர் என்ற பாணியிலும் இந்தக் கார் எண் அமைந்துள்ளது.

இதுகுறித்து பிரேம்ஜி கூறும் போது டிரைலரில் நீங்க யாருமே அத நோட் பண்ணல.. அந்தக் காருல விஜய்யோட நானும் இருப்பேன்.. இதுபோல பல விஷயங்கள் தி கோட் படத்துல இருக்கு” என்று அப்டேட்டைக் கூறியிருக்கிறார் பிரேம்ஜி அமரன்.

மேலும் உங்களுக்காக...