இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர்.. ஆனால் உலக அளவில் பேசப்பட்டவர்..!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் ஏராளமான படங்கள் இயக்கிய பின்னர் இயக்குனர்கள் பெற்ற புகழை ஒரு இயக்குனர் இரண்டே படங்கள் இயக்கி பெற்றார் என்றால் அது நிச்சயம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவாகத்தான் இருக்கும்.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா சென்னையைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் வித்தியாசமாக காணப்பட்டார். பள்ளியில் தனக்கு பிடிக்காத வாத்தியாரின் பாடங்களை அவர் வேண்டுமென்றே படிக்க மாட்டார். அந்த பாடத்தில் தோல்வி அடைந்தாலும் சரி என்று அவர் இருப்பார். அப்படித்தான் 12ஆம் வகுப்பில் அவர் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். ஏனெனில் அவருக்கு கணித வாத்தியாரை பிடிக்காது என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

திடீரென வீட்டிற்கு வந்து காதல் மோதிரம் அணிவித்த ‘வாரிசு’ நடிகர்.. சிவரஞ்சனி வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..!

இதனை அடுத்து சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வந்த அவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். இளையராஜாவின் இசைக்கு அடிமையானவர். அவருடைய பாடல்களை கேட்பதில் மிகவும் பிரியமானவர். இந்த நிலையில் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் அவருக்கு உதவி இயக்குனர் பணி கிடைத்தது.

thiyagarajan kumararaja2

இந்த நிலையில் குறும்பட போட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் வெற்றி என்ற ஒரு நிமிட அனிமேஷன் குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படத்தை பார்த்து தான் புஷ்கர் காயத்ரி தனது ‘ஓரம்போ’ என்ற திரைப்படத்தில் வசனம் எழுத அழைப்பு விடுத்தனர்.

அதனை அடுத்து அவர் எஸ்பிபி சரணின் அறிமுகத்தை பெற்றதன் காரணமாக ஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதற்கு முன் தியாகராஜா குமாரராஜா எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை என்றாலும் தூர்தர்ஷனில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.

வித்தியாசமான ஷாட்கள் வைப்பது, வித்தியாசமான திரைக்கதை அமைப்பது, ஒவ்வொரு கேரக்டரையும் அழுத்தமாக வைப்பது, வசனங்களை மிகவும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணி அறைந்தால் போல் வைப்பது ஆகியவை பார்த்து தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் அசந்து போனார் என்று கூறப்படுவது உண்டு.

தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட்டை உருவாக்கிய ஊமை விழிகள்: பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் சாதனை..!

ஒரு வழியாக ஆரண்ய காண்டம் திரைப்படம் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இந்த படம் பெரும் வரவேற்பை பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியில் வெற்றி கிடைத்தது. இந்த நிலையில் தான் இந்த படத்திற்கு சிறந்த அறிமுகம் இயக்குனர் என்ற தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு தான் இந்த படத்தை பலர் பார்க்க ஆரம்பித்தனர். ஓரளவு வசூல் கிடைத்தது. ரூபாய் 5.25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மொத்தம் ஏழு கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

thiagarajan kumararaja1

இந்த நிலையில் ‘ஆரண்ய காண்டம்’ வெளியாகி 8 வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார். திருமங்கையாக விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படம் முதல் படம் போலவே வித்தியாசமான திரைக்கதையுடன் அமைந்தது.

இந்த படத்திற்கு தான் விஜய் சேதுபதிக்கு சிறந்த சப்போர்ட்டிங் நடிகர் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கமலுடன் நடிக்க மறுப்பு.. ரஜினி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகை..!

ஆரண்ய காண்டம், சூப்பர்டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய தியாகராஜன் குமாரராஜா ‘மாடர்ன் சென்னை லவ்’ என்ற வெப் தொடரின் ஒரு பகுதியை மட்டும் இயக்கினார். இரண்டே படங்களில் உலக அளவில் புகழ் பெற்ற இவருடைய அடுத்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்த படத்தையும் தரமான படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...