விஜயகாந்த், சத்யராஜூக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய நூறாவது நாள்.. மொட்டை தலையில் மிரட்டிய வில்லாதி வில்லன்!

By John A

Published:

இயக்குநர் மணிவண்ணனின் கல்லூரிக்காலத்திலிருந்து நண்பராக விளங்கியவர் சத்யராஜ். திரைத்துறையில் முழுநேர நடிகராவதற்கு முன் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு அடையாளம் ஏற்படுத்தித் தந்தவரே மணிவண்ணன் தான். இவரின் இயக்கத்தில் மட்டும் 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சத்யராஜ். மேலும் இருவரின் காம்போவும் திரையில் மிகப் பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது.

இயக்குநர் மணிவண்ணனின் முக்கிய படைப்பான நூறாவது நாள் படம் கேப்டன் விஜயகாந்துக்கும் முக்கியப் படமாக அமைந்தது. எனினும் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோகன். அப்போது அவரே டாப் ஹீரோவாக இருந்துள்ளார்.

திரில்லர் படமான இது 1984வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அத்தோடு, மொட்டைத் தலை, கூலிங் கிளாஸ் சகிதம் நெகடிவ் ஷேடில் நடித்த சத்யராஜூக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய ஓபனிங்கைக் கொடுத்தது என்றே சொல்லலாம். நூறாவது நாள் வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பழம்பெரும் இயக்குநர் கே.விஜயனாம்.

இயக்குநர் மணிவண்ணன் அவரிடம் பேசி கிட்டத்தட்ட அந்த ரோலுக்கு அவரைத் தயார் செய்திருந்தார். படத்தின் பெரும்பாலான பகுதி இரவு நேரத்திலும் மழை எஃபெக்டிலும் எடுக்க வேண்டியது இருந்தது. அதேபோல், நெகடிவ் கேரக்டரில் நடிக்கும் நபர், பைப் சிகரெட்டை வைத்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

விஜயகாந்தை ஒதுக்கிய ஹீரோயின்களுக்கு மத்தியில் தானே முன்வந்து நடித்த பிரபல நடிகை.. திருப்புமுனையான படம்!

இதுபற்றியெல்லாம் தெரிந்துகொண்ட விஜயன், ஆஸ்துமா காரணத்தைச் சொல்லி அந்தப் படத்தில் நடிப்பதைக் கடைசி நேரத்தில் தவிர்த்திருக்கிறார். இதனால், அவருக்கு மாற்றாக நடிகர் கே.பாலாஜியை நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகியிருக்கிறார்கள். அவரும் அதே பிரச்சனையைக் காரணம் காட்டி நடிக்க மறுத்துவிட்டாராம்.

அப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் சிபாரில் இயக்குநர் மணிவண்ணனுடன் கதை இலாகாவில் பயணிக்கும் நோக்கில் டிஸ்கஷன்களில் சத்யராஜ் கலந்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை துளியும் இல்லையாம். கதை இலாகாவில் பயணித்து ஒரு கதாசிரியராக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்திருக்கிறது. நெகடிவ் கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் அணுகிய இரண்டு பேருமே மறுத்துவிட்ட நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்கு வந்த சத்யராஜை நடிக்க வைக்கலாமா என்கிற எண்ணம் எழுந்திருக்கிறது.

தென்னிந்திய சினிமாவின் அந்தக் காலத்து சுதா கொங்கரா.. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பெண் இயக்குநர்

இதையடுத்து, தி.நகரில் இருக்கும் நடிகர்களுக்குப் பிரபலமான சலூனுக்கு அவரை அழைத்துச் சென்று மொட்டை போட்டிருக்கிறார்கள். பின்னர், பிரபல போட்டோகிராஃபரான ஸ்டில்ஸ் ரவியை வைத்து சத்யராஜ் கையில் விலங்கை எல்லாம் கொடுத்து போட்டோக்கள் எடுத்திருக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு சத்யராஜ் சிறப்பாக இருப்பார் என்று படக்குழுவினர் நம்பினர்.

அந்த நம்பிக்கையை சத்யராஜ் சிறப்பாகவே காப்பாற்றினார்.ஒரு கட்டத்தில் அவருக்கு சண்டை காட்சிகளை வைக்கலாம் என்றெண்ணி படத்தில் ஃபைட் சீன்கள் வைத்திருக்கிறார்கள். நூறாவது நாள் படம் சத்யராஜ் மட்டுமல்ல, விஜயகாந்த் கரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது.