தென்னிந்திய சினிமாவின் அந்தக் காலத்து சுதா கொங்கரா.. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பெண் இயக்குநர்!

இந்திய சினிமாவின் பிரபல பெண் இயக்குநர்களாக சுதா கொங்கரா, ஐஸ்வர்யா ரஜினி, கிருத்திகா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இருந்து வருகின்றனர். அந்த காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே டைரக்ஷன் பணி என்ற இமேஜை உடைத்து தனது திறமையால் நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பியவர்தான் விஜய நிர்மலா. ஆந்திராவைச் சேர்ந்த விஜய நிர்மலா 1950இல் வெளிவந்த “மச்ச ரேகை” தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது 7வது வயதில் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு “பணமா பாசமா” என்ற படம் வெற்றிகரமாக ஓடி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. L R ஈஸ்வரியின் குரலில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த எலந்தபழம் எலந்தபழம் என்ற இவரது பாடல் ஓகோவென ஒலித்தது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் அன்பளிப்பு படத்தில் அவரது தங்கையாகவும், ஞானஒளி படத்தில் காதலியாகவும் நடித்துள்ளார். பின்னர் இவருக்கு டைரக்‌ஷன் துறையில் ஆர்வம் ஏற்படவே தெலுங்கு சினிமாவிற்குச் சென்றார். பின் மலையாளம், தெலுங்கு மொழிகளில் சுமார் 43 படங்கள் இயக்கினார். நடிகர் திலகத்தினை வைத்து 1983-ஆம் ஆண்டு இயக்கிய பெஸவாடா பெப்புலி தெலுங்குப் படத்தினை எடுத்தார். இவ்வாறு பிரபலமாக இருந்த ஆண்ட இயக்குநர்களுக்கு மத்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் விஜய நிர்மலா.

முதன் முதலில் இந்தப் படத்துக்குத்தான் வெற்றி விழா கொண்டாடுனாங்களா? அதுவும் எப்படி தெரியுமா?

மேலும் தெலுங்குத் திரையுலகில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் பொருட்டு ரகுபதி வெங்கையா விருது வழங்கப்பட்டது. இவர் தெலுங்கில் சூப்பர்ஸ்ராராக விளங்கிய நடிகர் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். நடிகர் திலகத்தின் மீது விஜய லலிதாவும் அவர் கணவர் கிருஷ்ணாவும் அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தனர் . கிருஷ்ணாவுடன் தெலுங்கு படங்களில் நடித்ததோடு நடிகர் திலகத்தை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் விஜயநிர்மலா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு இவ்வுலக வாழ்விற்கு விடைகொடுத்தார்.

சினிமா என்றால் ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்த காலத்தில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து சினிமாவைக் கற்றுக் கொண்டு அதன்பின் அதே சினிமாவில் 44 படங்களை இயக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற விஜய நிர்மலாவின் வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணிற்கும் உத்வேம் அளிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...