விஜயகாந்தை ஒதுக்கிய ஹீரோயின்களுக்கு மத்தியில் தானே முன்வந்து நடித்த பிரபல நடிகை.. திருப்புமுனையான படம்!

கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லையென்றாலும் நித்தமும் அவரைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி கேப்டனின் குணங்களை தினமும் யாராவது பேச அவரது புகழ் இன்னும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் கேப்டன் விஜயகாந்துடன் நடிப்பதற்கு சில நடிகைகள் யோசித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியகாரணமாகக் கருதப்படுவது அவரின் நிறம்.

கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க அப்போதிருந்த பல முன்னணி நடிகைகள் தயங்கிய நிலையில் ஒரே ஒரு நடிகை மட்டும் தானே முன்வந்து நடித்து அப்படத்தின் மூலம் திருப்புமுனையைப் பெற்றிருக்கிறார். அந்த நடிகை தான் சரிதா. இயக்குநர் கே. பாலச்சந்திரின் அறிமுகமான சரிதா அவரின் இயக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 22 படங்களில் நடித்திருக்கிறார். தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, தப்புத் தாளங்கள், அக்னி சாட்சி, புதுக்கவிதை உள்ளிட்ட படங்கள் அதில் அடக்கம்.

தென்னிந்திய சினிமாவின் அந்தக் காலத்து சுதா கொங்கரா.. கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பெண் இயக்குநர்

ஹீரோயினுக்கான இலக்கணங்கள் ஏதும் இல்லாது ஆனால் நடிப்பு என்ற திறமையை மட்டும்  வைத்துக் கொண்டு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பெரும்பாலும் ராதிகா, ராதா, அம்பிகா, ஸ்ரீதேவி என்றே பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் சரிதாவை பற்றி பெரும்பாலும் செய்திகளில் வருவது இல்லை. ஆனால் நடிப்பிற்கு பேர் போன நடிகையாகவே கருதப்பட்டவர் நடிகை சரிதா.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊமை விழிகள் படம் தயாராகிக் கொண்டிருந்த போது விஜயகாந்தின் மனைவியாக நடிப்பதற்கு ஹீரோயின் தேடிய நிலையில் சரிதாவின் பெயர் அடிபட்டிருக்கிறது. எந்த கேரக்டர் ஆனாலும் துணிச்சலோடு நடிக்கும் சரிதா பின் விஜயகாந்துடன் ஊமை விழிகள் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருப்பார்.

முதலில் ஊமை விழிகள் படத்தில் சரிதா நடிக்க ஆர்வமில்லாமல்தான் இருந்தாராம். அதன் பின் விஜயகாந்துக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் விஜயகாந்துக்காக ஒகே சொல்லியிருக்கிறார் சரிதா. அந்தப் படம் விஜயகாந்துக்கும் சரி அதில் நடித்த மற்ற கலைஞர்களுக்கும் சரி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதோடு சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...