இந்த பிரபல டைரக்டர்ஸ் எல்லாம் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்தவங்களா? லிஸ்ட்-ல் முக்கியமான பிரபல இயக்குநர்

By John A

Published:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்றவர்கள் ஏராளம். அதில் முன்னணி இடத்தில் இருப்பவர் கே. பாக்யராஜ். அதேபோல் கே. பாக்யராஜிடமும் பலர் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றினர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் என்றால் அது ஆர். பார்த்திபன். இந்திய சினிமாவின் வித்தியாசமான இயக்குநர். ரசனை, புதுமை, மேக்கிங் ஸ்டைல் என அனைத்திலும் வெரைட்டி காட்டுபவர். புதிய பாதை படத்தில் ஆரம்பித்து டீன்ஸ் படம் வரை பல படங்களை இயக்கியிருக்கிறார். அதில் ஒத்த செருப்பு, ஹவுஸ்புல், புதிய பாதை ஆகிய படங்களுக்கு தேசிய விருதினையும் பெற்றிருக்கிறார்.

இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகவும், நடிகராகவும் விளங்கும் ஆர். பார்த்திபனிடம் பலர் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி இன்று முன்னனி இயக்குநர்களாகத் திகழ்க்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் பார்த்திபனும், இயக்குநர் விக்ரமனும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். அப்போதே விக்ரமனைக் கணித்து விரைவிலேயே இவருக்கு ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம் பார்த்திபன்.

இவருதான் உன் படத்தோட ஹீரோவா? கேள்வி கேட்ட அக்கா.. கேளடி கண்மணியில் எஸ்.பி.பி ஹீரோவான நிகழ்வு

இதனையடுத்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ்சினிமாவின் மனங்கவர்ந்த இயக்குநரானார் விக்ரமன். அடுத்ததாக கரு.பழனியப்பன். இயக்குநர் பார்த்திபன் கரு. பழனியப்பனின் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துள்ளாராம். இவரைப் போல் நாம் இல்லையே என்று பிரமிக்கும் அளவிற்கு புத்திக் கூர்மையுடன் இருப்பாராம் கரு. பழனியப்பன். பார்த்திபனுடன் ஹவுஸ்புல், புள்ளகுட்டிக் காரன் ஆகிய படங்களில் பணியாற்றிய கரு.பழனியப்பன் அதன்பின் பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், மந்திரப் புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இதற்கு அடுத்ததாக முக்கியமான இயக்குர் ஹெச். வினோத். கரு.பழனியப்பனைப் போலவே புத்திக் கூர்மை கொண்டவர். சமூகக் கதையை கமர்ஷியலாகக் கொடுப்பதில் வல்லவர். ஹெச். வினோத் பார்த்திபனிடம் சரிகமபதநி, புள்ளகுட்டிக்காரன், பச்ச குதிர ஆகிய படங்களில் உதவியாளராக இருந்திருக்கிறார். இப்படி தன்னைச் சுற்றிலும் மிக திறமையான உதவியாளர்கள் டீம் மூலமாகவே தரமான பல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.