வீட்டை அடகு வைத்து பாரதிராஜா எடுத்த படம்.. முதல் மரியாதை உருவாக காரணமான ரஷ்ய எழுத்தாளர்!

Published:

நடிகர் திலகத்துக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்து அதுவரை சிவாஜி மீதிருந்த அத்தனை பார்முலாவையும் உடைத்து  சிவாஜியின் மற்றொரு திரை முகத்தைக் காட்டிய படம் தான் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இசையில் 1986-ல் வெளிவந்த ‘முதல் மரியாதை’ படம் அப்போது வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. சிறந்த பாடல், சிறந்த வட்டார மொழி திரைப்படம் உள்ளிட்ட இரண்டு தேசிய விருதுகளை இப்படம் வென்றது. இந்தப்படத்தில் பாரதிராஜா தயாரிப்பாளராகக் களம்  இறங்கியிருந்தார்.

இந்தப்படதிற்கான கதையை எழுதியவர் செல்வராஜ். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் கதாசிரியராக பணி ஆற்றியவர். மணிரத்னத்துடன் கதை விவாதங்களில் பங்கெடுப்பவர். இப்படி தமிழ் சினிமாவின் கிளாசிக் பட படங்களான அன்னக்கிளி, புதிய வார்ப்புகள், உதயகீதம், பகல் நிலவு, புதுமை பெண் உள்ளிட்ட பல படங்களின் கதையை எழுதியவர்.

இந்நிலையில் 80களின் பிற்பகுதியில் பாரதிராஜா ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுத்தார். அப்போது தானே படம் தயாரிக்கலாம் என் எண்ணி தான் தி.நகரில் வாங்கியிருந்த வீட்டினை விற்று, நடு இரவில் கதாசிரியர் செல்வராஜை சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் சூட்கேசில் உள்ள மொத்த பணத்தையும் கொடுத்து, ”என் வாழ்வும், தாழ்வும் உங்கள் கையில் தான் இருக்கிறது, நல்ல கதை ஒன்றை தயார் செய்யுங்கள்” என்று கூறி பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஆடுகளம் படத்துக்கு முதல்ல இருந்த டைட்டில் இத்தனையா? பிரபல படங்களின் டைட்டிலை வைத்த வெற்றிமாறன்

அப்போது செல்வராஜ் நிறைய கதைகளை யோசிக்க எதுவும் திருப்தியாக இல்லை. ஒருமுறை பயணம் செய்யும் போது உலக புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தாதாவெஸ்கியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க நேர்ந்தது. அப்போது தாதாவெஸ்கி ததன்னுடைய முதிர்வு வயதில் தனக்காக டைப்பிஸ்ட் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணிடம் காதல் வயப்பட்டார். மேலும் அப்பெண்ணும் இவருடைய எழுத்தில் மயங்கினார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வரலாறு. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். இந்த கதை செல்வராஜுக்கு பொறி தட்டியது.

உடனே கதை எழுத ஆரம்பித்தார். அதனை தமிழ் சினிமாவிற்கு ஏற்றவாறு தயார் செய்தார். பின்னர் பாரதிராஜாவிடம் இக்கதையைச் சொல்ல அவருக்கும் பிடித்துப்போய் பட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் ராஜேஷ். பின்னர் நடிகர் திலகத்தை அணுக அவரும் ஓகே சொல்ல, பாரதிராஜா பணம் கொடுத்த சரியாக 100 நாட்கள் கழித்து படம் வெளியானது. மலைச்சாமியாக சிவாஜியும், பொன்னாத்தாளாக வடிவுக்கரசியும், குயிலியாக ராதாவும் நடித்தனர். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜா இசை, மலேசியா வாசுதேவன் பின்னணி என பாடல்கள் இன்றும் உயிர் துடிப்புடன் மலைச்சாமியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

மேலும் உங்களுக்காக...