ஆடுகளம் படத்துக்கு முதல்ல இருந்த டைட்டில் இத்தனையா? பிரபல படங்களின் டைட்டிலை வைத்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் இயக்குனர் தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த படம் ஆடுகளம். மதுரையை களமாகக் கொண்ட கதைக்கள் எதுவும் தோல்வி அடைந்ததில்லை என்பதற்கு இந்தப்படம் ஓர் சிறந்த உதாரணம். அதற்குக் காரணம் வலுவான கதைக்களம் மற்றும் சிறந்த பரபரப்பான திரைக்கதை உள்ளட்டவற்றைக் கொண்டு ஆடுகளம் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது. பொல்லாதவன் படத்திற்குப் பின் தனுஷுடன் மீண்டும் இணைந்த வெற்றிமாறன் குரு சிஷ்யன் இடையே நடைபெறும் பனிப்போரை சேவல் சண்டையை மையமாக வைத்து எடுத்திருப்பார். 2011-ல் வெளிவந்த இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. தனுஷின் சிறந்த நடிப்பினை இந்தப்படம் வெளிக் கொண்டு வந்தது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை, அறிமுக நாயகி டாப்ஸி, தனுஷ் எதார்த்த நடிப்பு, பரபரப்பு திரைக்கதை உள்ளிட்டவற்றால் ஆடுகளம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. மேலும் படமும் பம்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கான கதையை வெற்றிமாறன் ஏற்கனவே எழுதியிருந்த நிலையில் அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என தனுஷும், வெற்றிமாறனுக்கு யோசித்திருக்கின்றனர். அப்போது இவர்கள் யோசித்த தலைப்பு ‘சண்டைக்கோழி’. அதன் பின் அந்த தலைப்பில் இயக்குனர் லிங்குசாமி விஷாலை வைத்து வெற்றி படத்தைக் கொடுக்க, அதற்குப் பின் சேவல் என யோசித்திருக்கின்றனர்.

‘அழகி’ பட ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்.. ரியலாகவே தேவயானி செய்த சம்பவம்.. கணவர் மேல் அப்படி ஒரு காதலா ?

பின்னர் அந்த தலைப்பை பதிவு செய்யும் போது இயக்குனர் ஹரி இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். அப்போது வெற்றிமாறன் அந்த தலைப்பை ஹரியிடம் கேட்க, அவரோ இந்த தலைப்பில் படம் எடுப்பதற்காக பூஜை போட்டு விட்டதாகக் கூறியுள்ளார். எனவே மாற்று டைட்டில் ‘களம்’ என வைக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

தனுஷும் ஓகே சொல்ல, மீண்டும் ஆலோசனை நடத்தி ‘ஆடுகளம்’ என்று டைட்டில் பதிவு செய்தனர். இப்படி 3 டைட்டிலுக்குப் பிறகே ஆடுகளம் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் வெற்றிமாறனுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன் பின் இவர்கள் கூட்டணி வடசென்னை, அசுரன் என்று தொடர்ந்து வருகிறது. தனுஷின் சினிமா வளர்ச்சியில் வெற்றிமாறனுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...