தமிழ்சினிமா உலகின் பொக்கிஷம் இளையராஜா. டிரைவர்களை தூங்க விடாதாம் இளையராஜா இசை… ஆனா உள்ளே இருக்குற பயணிகளுக்கு நல்ல தாலாட்டு அவரது இசை. இது உண்மைதான்.
இரவு நேர வேலை செய்பவர்களுக்கு எல்லாம் இளையராஜாவின் இசை தான் ஊக்க மருந்து. அது அவர்களை ரசித்துக் கேட்கச் செய்வதால் உற்சாகத்தைத் தருகிறது. அதே நேரம் அந்த மெலடி பாடல்களை நாம் இரவு நேரம் கேட்டுக் கொண்டே படுத்தால் தூக்கம் சுகமானதாக அமையும்.
உதாரணத்திற்கு இரவு நேரப் பாடலாக பல இளையராஜாவின் ஹிட்ஸ்கள் உள்ளன. நிலாவே வா, உதய கீதம் பாடுவேன் என பல மோகன் பாடல்களைக் கேட்டாலே போதும். இவை எல்லாமே இளையராஜாவின் கைவண்ணம் தான். ஒரு இசை ஒரு சாரரைத் தூங்கவும் வைக்கிறது. இன்னொரு சாரரை விழிக்கவும் வைக்கிறது.
அப்படி என்றால் அந்த இசைக்கு எவ்ளோ பெருமை. அதற்குச் சொந்தக்காரர்தான் இளையராஜா. அதனால் தான் ரசிகர்கள் அவரை இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் புகழ்கின்றனர். இன்னும் ஒருசில ரசிகர்கள் ஒரு படி மேல் போய் இசைக்கடவுள் என்றே அழைக்கின்றனர். இவரது இந்த முரண்பாடான இசை குறித்து கண்ணாத்தா பட இயக்குனர் பாரதி கண்ணன் இப்படி தெரிவித்துள்ளார்.
இளையராஜா சாரு ஒருமுறை எங்கிட்ட சொன்னாரு. ஆம்னி பஸ்ல, லாரிலன்னு எல்லாத்துலயும் என் பாட்டைக் கேட்குறாங்க. இதுல ஒண்ணு கவனிச்சீங்கன்னா, என் பாட்டு டிரைவரை தூங்க விடாம பண்ணுது. உள்ள இருக்குற பேசஞ்சர தூங்க வைக்குதுன்னு சொன்னதாக சொல்கிறார் பாரதி கண்ணன்.