இவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி., இளையராஜாவுக்கு அடுத்த படியாக  தேனிசை தென்றலாய் அதிகமான படங்களுக்கு இசையமைத்துச் சாதனை படைத்தவர்தான் தேவா. இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் ஒவ்வொரு ஸ்டைலில் பாடல்கள் கொடுக்க இவர்கள் அனைவரும் கலந்த கலவையாக இசையமைத்து சினிமா ரசிகர்களுக்கு தன் இசையால் மனதை வருடியவர்.

அஜீத், விஜய், பிரசாந்த் போன்றோருக்கு பல ஹிட் பாடல்களைக் கொடுத்து அவர்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர் இசையமைப்பாளர் தேவா. முதன் முதலாக 1989-ல் மனசுக்கேத்த மகராசா படம் மூலமாக அறிமுகமான தேனிசைத் தென்றல் தேவா தனது அடுத்த படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் கவனிக்க வைத்தவர். இப்படம் இவருக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினைக் கொடுக்க தொடர்ந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

தொடர்ந்து வசந்த காலப் பறவைகள் படத்தில் செம்பருத்தி, செம்பருத்தி என்ற சூப்பர் ஹிட் பாடலைக் கொடுத்து அப்போதைய சினிமா ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார் தேவா.

அப்படியே முருகனே நேரில் வந்த மாதிரி உணர்வு.. மயக்கும் குரலால் கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள்

இந்நிலையில் ஒருநாள் திடீரென ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பிஸியாக இருந்த தேவாவிற்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு பின்னாளில் தனது திரை வாழ்க்கையே மாற்றும் என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை. அழைப்பில் மறுமுனையில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

தேவா நான் பாலச்சந்தர் பேசுறேன். என்னோட அடுத்த படத்துக்கு நீ தான்  இசையமைப்பாளர் எனக் கூற தேவாவின் வாழ்வில் ஒளி பிறந்துள்ளது. அதுவும் ஹீரோ யார் தெரியுமா? ரஜினி என்று பாலச்சந்தர் கூற தேவா மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் நான் இயக்குநர் இல்ல, சுரேஷ் கிருஷ்ணா என்று கூறி தன்னுடைய கவிதாலயா சார்பில் வெளியான அண்ணாமலை படத்திற்கு இசையமைக்க வைத்தார்.

பாடல்களைக் கேட்ட பாலச்சந்தர் தேவாவிடம் நீ இத்தனை நாளா எங்கயா இருந்த.. உன்னை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனதே என்று ஆதங்கப்பட்டு தேவாவின் திறமையைப் பாராட்டியிருக்கிறார். ரஜினிக்கு அண்ணாமலையில் கொடுத்த மாஸ் ஹிட் அதுவரை ரஜினி படங்கள் வசூலித்த சாதனையை மிஞ்சியது. அதற்கு முக்கியக் காரணம் தேவாவின்  இசையே. பின்னணி இசையிலும், தீம் மியூசிக்கிலும் எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி என்கிற பிராண்டுக்கான டைட்டில் தீம் மியூச்சிக்கையும் போட்டு ரசிகர்களை வைப் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பாட்ஷா படத்திற்கும் இசையமைக்க புகழினின் உச்சத்திற்கே சென்றார் தேவா.