உலக நாயகனை அடுத்து இயக்கப் போகும் அட்லி.. வெளியான புது அப்டேட்.. கூடவே நடிக்கப் போகும் இன்னொரு சூப்பர் ஸ்டார்..

Published:

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சில குறும்படங்களை இயக்கி ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் அட்லி. ராஜா ராணி படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிட்டவே அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு பக்க கமர்ஷியல் படமாக தெறி படத்தினை இயக்கினார்.

இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாக முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைந்தார் அட்லி. அடுத்தாக மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தினைக் கொடுத்தார். இப்படமும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பிகில் படத்துடன் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த அட்லிக்கு அடுத்து அமைந்தது தான் ஷாரூக்கானை இயக்கும் வாய்ப்பு.

சுக்கிர திசை அட்லி பக்கம் அடிக்க ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே என இந்திய சூப்பர் ஸ்டார்களை வைத்து ஜவான் படத்தினை இயக்கி 1000 கோடி வசூலை ஈட்டி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் வாய்பிளக்க வைத்தார் அட்லி.

கமர்ஷியல் வித்தையை நன்கு தெரிந்து கொண்ட அட்லி அதனை சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் கொடுத்தார். இயக்கிய 4 படங்களுமே பம்பர் மெகா ஹிட் வரிசையில் சேர்ந்தது. எனினும் அவர் மீது பழைய திரைப்படக் கதைகளை தூசுதட்டி இந்த டிரெண்டுக்கு ஏற்றாற் போல் கொடுக்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அட்லி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா? பல வருடங்களுக்குப்பிறகு வெளிப்படுத்திய ஹீரோ..

தற்போது அட்லியின் அடுத்த படத்தில் இந்திய சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைய உள்ளனர். ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன். மற்றொருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இப்படி இந்திய சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களையும் தனது படத்தில் இணைக்கிறார் அட்லி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2025-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதன்பிறகு அட்லியின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகராக அவருக்கு விக்ரம் என்ற பிளாக் பஸ்டரைக் கொடுத்த நிலையில் தற்போது அட்லியும் அந்த வரிசையில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...