அஜித் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் தனது தயாரிப்பாளருக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லாததால் அந்த படத்தை இயக்க முடியாது என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். அந்த இயக்குனர் தான் ஏ.வெங்கடேஷ்.
சரத்குமார் நடித்த மகா பிரபு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஏ.வெங்கடேஷ். இந்த படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!
இந்த படத்தை அடுத்து அவர் விஜய் நடித்த ‘செல்வா’, ‘நிலாவே வா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தை இயக்க ஏ.வெங்கடேஷ் முடிவு செய்தார். இதில் ஒரு முக்கிய கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார். இந்த நிலையில்தான் இந்த படத்தின் கதையை கேட்ட முதல் பட தயாரிப்பாளரான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, இந்த படத்தை தானே தயாரிப்பதாகவும் சிவாஜி கணேசனுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து சிவாஜி கணேசனுக்கு மிகவும் நெருக்கமான சி.வி.ராஜேந்திரன் அவர்களை அழைத்துக் கொண்டு சிவாஜி கணேசனிடம் ஏ.வெங்கடேஷ் கதையை கூறினார். கதையை கேட்ட சிவாஜி கணேசன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் ஹீரோ யார் என்று கேட்டபோது தயாரிப்பாளர் அவர்களின் மூத்த மகன் அஜய் என்று கூறினார். உடனே ஓகே சொன்ன சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தேதியை மட்டும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
வரிசையாக 6 வெற்றி படங்கள்.. இளையராஜாவை பகைத்ததால் தொடர் தோல்வியால் துவண்ட தயாரிப்பாளர்!
இதனை அடுத்து பூப்பறிக்க வருகிறோம் என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டு விறுவிறுப்பாக படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்தது. இந்த நிலையில் ஒரு நாள் சி.வி.ராஜேந்திரன் இயக்குனர் ஏ.வெங்கடேஷை அழைத்து இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்துள்ளது. எனவே இந்த படத்தை நானே தயாரிக்கிறேன். அது மட்டுமல்ல இந்த படத்தில் அஜய்க்கு பதிலாக அஜித்தை நடிக்க வைப்போம். அஜித் இந்த படத்தில் நடித்தால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும், நான் அஜித்திடம் பேசி கால்ஷீட் வாங்கி தருகிறேன் என்றும் கூறினார்.
இதனை அடுத்து மறுநாள் தான் முடிவு சொல்வதாக வந்த வெங்கடேஷ் இரவு முழுவதும் தூங்காமல் யோசித்ததாகவும் அப்போது தனது முதல் பட தயாரிப்பாளர் மகனை அறிமுகப்படுத்துவதுதான் சரியாக இருக்கும், அவரை விட்டுவிட்டு சி.வி.ராஜேந்திரன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை இயக்கினால் அது முதல் பட தயாரிப்பாளருக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாக இருக்கும் என்று முடிவு செய்தார்.
இதனை அடுத்து மறுநாள் அவர் சி.வி.ராஜேந்திரனை சந்தித்து தன்னுடைய முதல் பட தயாரிப்பாளருக்கு தன்னால் துரோகம் செய்ய முடியாது என்றும் தான் கொடுத்த வாக்கின்படியே அஜய், சிவாஜி கணேசன் நடிப்பில் தான் இந்த படத்தை இயக்கப் போகிறேன் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து சி.வி.ராஜேந்திரனும் வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு சிவாஜி கணேசன், அஜய், மாளவிகா, ரகுவரன், எம்.என்.நம்பியார், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் சிறிய அளவில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தது.
எம்ஏ தேர்வு எழுத வேண்டாம் என கூறிய இளையராஜா.. சின்னக்குயில் சித்ரா எடுத்த முடிவு..!
ஏ.வெங்கடேஷ் மட்டும் நினைத்திருந்தால் அஜித் மற்றும் சிவாஜி கணேசனை இணைத்து இந்த படத்தை இயக்கியிருக்கலாம், அவ்வாறு இயக்கி இருந்தால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். ஆனால் தனது முதலாளியான முதல் பட தயாரிப்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய விரும்பாததால் ஏ.வெங்கடேஷ் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார்.