எம்ஏ தேர்வு எழுத வேண்டாம் என கூறிய இளையராஜா.. சின்னக்குயில் சித்ரா எடுத்த முடிவு..!

சிந்து பைரவி திரைப்படத்திற்காக நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடிய சின்னக்குயில் சித்ரா அடுத்த சில மணி நேரத்தில் ரயிலை பிடித்து கேரளாவில் எம்ஏ தேர்வு எழுத இருந்த நிலையில் ‘நீ எம்.ஏ தேர்வு எழுத வேண்டாம் இன்னொரு பாடலை பாடிட்டு போ அது உனக்கு மிகப்பெரிய புகழை கொடுக்கும்’ என்று இளையராஜா கூறியதாகவும் அவருடைய சொல்லை தட்டாமல் அவர் எம்ஏ தேர்வை தியாகம் செய்துவிட்டு அந்த பாடலையும் பாடி கொடுத்ததாகவும் சித்ராவே பல பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த பாட்டு தான் ‘பாடறியன் படிப்பறியேன்’. அந்த பாட்டு அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

திரை உலக பின்னணி பாடகர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் சித்ரா. கேரளாவை சேர்ந்த அவர் திருவனந்தபுரத்தில் தனது படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது. ஏனெனில் அவரது பெற்றோர் இருவருமே இசை கலைஞர்கள். இவரது சகோதரி பீனா என்பவரும் இவரும் சிறு வயதிலேயே முறைப்படி இசையை பயின்று கொண்டனர்.

திடீரென வீட்டிற்கு வந்து காதல் மோதிரம் அணிவித்த ‘வாரிசு’ நடிகர்.. சிவரஞ்சனி வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..!

சித்ரா தனது ஐந்தாம் வயதிலேயே அகில இந்திய வானொலியில் சில பாடல்களை பாடி உள்ளார். இருப்பினும் திரைப்படத்தில் பாடும் எண்ணம் ஆரம்பத்தில் அவருக்கு இல்லை. இந்த நிலையில்தான் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பு பெற்றார். அதன் பிறகு அவர் ஜேசுதாஸ் உடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடிய போது தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

chithra1

இயக்குனர் ஃபாசில் தன்னுடைய  சூப்பர் ஹிட் மலையாள படம் ஒன்றை தமிழில் மொழிமாற்றம் செய்ய விரும்பினார். அந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த படத்தை இளையராஜா பார்த்தார். அப்போது அந்த படத்தில் இடம் பெற்ற பாடலை பாடிய சித்ராவை தன்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறியதை அடுத்து இளையராஜாவை பார்த்தார்.

அதன் பிறகு தான் இளையராஜா சித்ராவை பல  திரைப்படங்களில் பயன்படுத்தினார். குறிப்பாக சிந்து பைரவி படத்தில் நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடுவதற்காக வர சொல்லியிருந்தார். சித்ராவும் தனது தந்தையுடன் சென்னைக்கு வந்த நிலையில் 7 மணி முதல் 1 மணி வரை நீங்கள் பாடினால் போதும் என்று முதலில் இளையராஜா கூறியிருந்தார். அதன்படி அவர் ‘நான் ஒரு சிந்து’ பாடலை சிறப்பாக பாடி முடித்தவுடன் அன்றைய தினம் மாலை திருவனந்தபுரம் செல்வதற்காக ரயிலை பிடிக்க சித்ராவும் அவரது தந்தையும் தயாரானார்கள்.

அப்போதுதான் இளையராஜா சித்ராவின் தந்தையிடம் சென்று ‘இன்னொரு பாடல் இருக்கிறது அதையும் பாடிவிட்டுச் செல்ல முடியுமா’ என்று கேட்டார். அப்போது சித்ராவின் தந்தை ‘சித்ராவுக்கு நாளை காலை எம்ஏ தேர்வு இருக்கிறது என்றும் அதனால் என்ன செய்வது என்று யோசிக்கிறோம்’ என்று கூறினார். ‘எம்ஏ தேர்வு எப்போது வேண்டுமானால் எழுதிக் கொள்ளலாம், ஆனால் இந்த பாடல் வாய்ப்பு கிடைக்காது இந்த பாடலை பாடினால் சித்ராவுக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும். யோசித்துக் கொள்ளுங்கள்’ என்று இளையராஜா கூறியுள்ளார்.

இதனை அடுத்து சித்ராவின் தந்தை தனது மனைவிக்கு போன் செய்தபோது அவர் ‘எம்ஏ தேர்வு அடுத்தமுறைகூட எழுதி கொள்ளலாம், முதலில் பாட சொல்லுங்கள் இளையராஜா போன்ற பெரிய மேதையிடம் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்’ என்று கூறியதாகவும் அதன் பிறகு எம்.ஏ தேர்வை தியாகம் செய்து சித்ரா பாடியதாகவும் தெரிகிறது. அந்த பாடல் தான் பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடல். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதும் சித்ராவிற்கு கிடைத்தது.

இளையராஜாவுக்கே இசை டெஸ்ட் வைத்த தயாரிப்பாளர்.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட இசைஞானி..!

chithra2

இந்த பாடலுக்காக எம்ஏ தேர்வை சித்ரா தியாகம் செய்தாலும் மீண்டும் அந்த தேர்வை எழுத வேண்டும் உனக்கு ஒரு டிகிரி கண்டிப்பாக தேவை என்று அவர் தந்தை வலியுறுத்தினார். ஆனால் சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்ததை அடுத்து கடைசி வரையும் அவர் அந்த தேர்வை எழுதவில்லை என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட கூறியுள்ளார். ஒருவேளை அவர் எம்ஏ தேர்வு எழுதி இருந்தால் பட்டம் கிடைத்திருக்கும் ஆனால் தேசிய விருது என்ற பட்டமும் மிகப்பெரிய புகழும் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இளையராஜாவின் இசையில் பாடிய சித்ரா அதன் பின் ஏஆர் ரகுமான், மரகதமணி, பரத்வாஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பாடியுள்ளார்.

chithra5

சிந்து பைரவி படத்திற்காக தேசிய விருதை கடந்த 1986ஆம் ஆண்டு பெற்ற சித்ரா அதன்பிறகு  மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெற்ற மானாமதுரை என்ற பாடலுக்காகவும் விருது பெற்றார். அதனை அடுத்து ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றார். இதேபோல் மலையாள, இந்தி பாடல்களுக்கும் தேசிய விருதைப் பெற்றுள்ளார். மொத்தம் அவர் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

chithra3

சின்னக்குயில் சித்ரா, விஜய் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பல ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது அந்தக் குழந்தை நீச்சல் குளத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் காலமானது. மகள் இறந்த சோகம் சித்ராவை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியதையடுத்து அவர் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் பாடல்களை பாடவில்லை.

டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல்..!

உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை தனது பாடலால் சந்தோஷப்படுத்திய சித்ராவின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம் அவரது மனதை உருக்குலைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...