கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய திரைப்படங்கள் வெளியானபோது இரண்டு திரைப்படங்களிலும் இடம் பெற்ற ஒரு வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘‘சத்தியமா சொல்ரேன், அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன்’ என்ற வசனம் அஜித்தை கிண்டலடிப்பதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக விஸ்வாசம் படத்தில் பேரு தூக்கு துரை தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார் பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பெரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா ” என்ற வசனம் வெளியானது
இந்த நிலையில் விஸ்வாசம் படத்தில் வெளியான இந்த வசனத்திற்கு பதிலடியாக ஒரு வருடம் கழித்து தற்போது ‘தர்பார்’ படத்தில் ‘உன் பேரு அட்ரஸ் எல்லாம் தெரிஞ்சு நான் என்ன கேபிள் கனெக்சனா கொடுக்க போறேன்’ என்று கிண்டலடிக்கும் வகையில் ஒரு வசனம் வைக்கப்பட்டு ரஜினி பதிலடி கொடுத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது