பொழுதுபோக்கு

தர்பார் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் செய்த புரமோஷன்: பெரும் பரபரப்பு


603e2eba51cabb5facf70ddd895c5d16

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்திற்கு புரமோஷன் செய்யும் வகையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வகையில் ஒரு வசனம் இருப்பதாகவும் அந்த வசனம் குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டபோது ’சசிகலா குறித்து தர்பார் படத்தில் கூறப்பட்ட கருத்து சரியானதுதான் என்று அவர் கூறியுள்ளார்

சசிகலா குறித்து அப்படி என்னதான் இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த படத்தை பார்க்க உள்ளதாக ஒருசில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். எனவே அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில் இந்த படத்தின் புரமோஷன் போல் அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பணமிருந்தால் சிறையில் உள்ள கைதிகள் கூட ஷாப்பிங் செய்யலாம் என்ற வசனம் தான் சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது

Avatar photo
Staff