தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் திரைப்படங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவதை பழக்கமாக கொண்டிருக்கிறார் இளையராஜா. அவர் கேட்பது சரிதான் என ஒரு தரப்பினரும், அவர் காசு வாங்கி கொண்டுதானே இசையமைத்தார். சம்பளம் வாங்கிய பின் அந்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்குதான் சொந்தம்.
அவர் அந்த பாடல்களின் உரிமையை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்கிறார். அந்த பாடல் படங்களில் பயன்படுத்தபடும்போது சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து என்.ஓ.சி வாங்கிவிட்டே தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இதை சரியாக செய்கிறார்கள். சின்ன தயாரிப்பாளர்களில் சிலர் இதை செய்வதில்லை. ஆனால், எப்படிப்பார்த்தாலும் அந்த பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், இதற்கெல்லாம் இளையராஜா விளக்கம் கொடுப்பது இல்லை. குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா போட்ட 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, அவரிடம் அனுமதியும் பெறவில்லை. எனவே, 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. இதுவும் இப்போது விவாதபொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், தமிழ் படம் பட இயக்குனர் சி.எஸ்.அமுதன் ‘ரத்தம் படம் உருவான போது அவரின் ஒரு பாடலை பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டோம். அவருக்கு பணம் கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராகவே இருந்தார். ஆனால், பணம் எதுவும் வேண்டாம் என சொல்லியதோடு பாடலை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கொடுத்தார்.
அவர் எதிர்பார்ப்பது இதுதான். இதை நம்மால் செய்ய முடியும். இளையராஜாவுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும். அவருக்கு ஆதரவு இல்லை எனில் வேறு யாருக்கு?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.