விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!

Published:

தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்பில் உள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் ‘லியோ’ ஒரு அதிவேக ஆக்‌ஷன் திரைப்படம் என்றும், விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் சார்ஜா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, சாண்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள், ‘நா ரெடி’ கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது, இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று தற்பொழுது வரை டிரெண்டிங்கில் உள்ளது.

மேலும் இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் ரீலிஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து தற்பொழுது சமூக ஊடகங்களில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ‘நா ரெடி’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சிறப்பாக நடனமாடியுள்ளார். ஷிகர் தவானின் ‘நா ரெடி’ பாடல் பதிப்பு வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் விஜய்யின் ரசிகர்கள் தங்கள் ஹீரோவின் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘லியோ’ படத்தில் ‘நா ரெடி’ பாடலுக்கு நாடு தழுவிய நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த படம் பான்-இந்திய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!

மேலும் இப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது.லியோ படத்தின் அடுத்தடுத்து அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...