அபிராமியை கொலை செய்ய நடக்கும் சதி… பரபரப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

Published:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கண்ணீர் ததும்ப ரயில்வே ட்ராக் அருகில் இருக்கும் டெட் பாடியை அடையாளம் காண செல்கிறான். பின்னர் அங்கு இறந்து கிடந்த பெண்மணி தனது அம்மா இல்லை என்பதை கண்டு நிம்மதி அடைகிறான்.

ராஜேஸ்வரியும் ஐஸ்வர்யாவும் இறந்தது அபிராமி இல்லை என்று கேள்விப்பட்டதும் ஆத்திரம் அடைகின்றனர். ராஜேஸ்வரி எப்படியாவது அபிராமி சாக வேண்டும் அதை நாம் நடத்த வேண்டும் என்று மனதிற்குள் நினைக்கிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை ரோடு ரோடாக தேடி அலைகிறான். கோவிலில் சென்று என் அம்மாவை எனக்கு திருப்பி கொடுத்து விடு இல்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்தை எனக்கு காட்டு என்று வணங்கி கொள்கிறான்.

பின்னர் ஒரு கோவிலில் அபிராமி படுத்திருக்கிறார். ஐயர் வந்து அம்மா இரவாகிவிட்டது நடை சாத்த வேண்டும் நீங்க வீட்டுக்கு போகவில்லையா என்று கேட்கிறார். அதற்கு அபிராமி வீட்டில் பிரச்சனை மனசு சரியில்லை, இன்று ஒருநாள் மட்டும் இங்கு தங்கி கொள்கிறேன். எனக்கு அனுமதி கொடுங்க என்று கேட்கிறாள். ஐயர் சரி என்று சொல்கிறார்.

மறுபுறம் வீட்டில் ராஜேஸ்வரியும் ஐஸ்வர்யாவும் அபிராமியை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியே போன அபிராமி மறுபடியும் வீட்டிற்கு பிணமாக தான் வர வேண்டும் என்று சொல்கிறாள். ஆனால் அபிராமியை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறாள்.

அதற்கு ஐஸ்வர்யா அபிராமி மனசு சரியில்லை அப்படினா ஒரு கோவிலுக்கு போவாங்க அது எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். பின்னர் இருவரும் ரியாவிடம் சென்று நீ எங்களுடன் கூட்டு சேர்ந்து விடு, நாம் அபிராமியை கொன்றுவிடுவோம் அப்போதுதான் சொத்து மொத்தமும் நமக்கு கிடைக்கும் என்று பிளான் செய்கின்றனர். ரியா மனதிற்குள் நாம இந்த சொத்தை அனுபவிக்கலாம்னு வந்தா இவங்க என்ன ஜெயில்ல தள்ளிடுவாங்க போலயே என்று நினைத்துக் கொண்டு தயங்குகிறாள். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...