காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் உயிரிழப்பு.. சோகத்தில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் ஒருவரான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையில் உள்ள சில நிகழ்ச்சிகளில், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள பிஜிலி…

bijili

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் ஒருவரான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் உள்ள சில நிகழ்ச்சிகளில், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள பிஜிலி ரமேஷ்   சில மாதங்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

யூடியூப் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் தீவிர ரஜினி ரசிகர் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிஜிலி ரமேஷ், ’நட்பே துணை’ ’கோமாளி’ உட்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் குடிப்பழக்கம் காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் கூட தன்னுடைய சிகிச்சைக்கு உதவி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இன்று காலை பிஜிலி ரமேஷ் காலமானதாக செய்திகள் வெளியானதை அடுத்து திரையுலகினர் சோகமடைந்துள்ளனர். பலர் தங்களது சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.