திரௌபதி, பகாசூரன், ருத்ர தாண்டவம் உள்பட பல படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர் மோகன்.ஜி. இவர் இயக்குனர் ரஞ்சித்தைப் பற்றி இவ்வாறு காட்டமாகப் பேசியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் மலையாள இயக்குனர் பிஜூ ஒரு கேள்வி கேட்டார். அதாவது நீங்கள் ரஜினியை வைத்து தலித் அரசியலைப் பேசி இருந்தீர்கள். அது அவருக்குப் புரிந்ததா என்று கேள்வி கேட்டார். அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் ரஞ்சித் சிரித்து விட்டார்.
இதையும் படிங்க… மன்சூர் அலி கானுக்கு விஷம் வைத்து கொல்லப் பார்த்தார்களா?.. ஐசியூவில் அட்மிட் ஆக அதுதான் காரணமா?
இது சோசியல் மீடியாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை உண்டாக்கியது. ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தார்கள். பா.ரஞ்சித் நன்றி இல்லாதவர்கள் என்றார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் மோகன்.ஜி. இப்படி பேசியுள்ளார்.
அந்த ஏணிப்படியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக முன்னேறியவர் நீங்கள். ஆனால் ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் தெரியாது என நக்கலும் நையாண்டியுமாக விமர்சனம் செய்தது.
அவரின் நன்றி இல்லாத போக்கைக் காட்டுகிறது. அதை பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாக இருந்தது. அன்று அவர் இல்லை என்றால் இன்று உங்களால் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியுமா? உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டார்.
நடிகர் ரஜினிக்கு உலகம் எங்கம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறந்த மனிதர். ஆன்மிகவாதி. சமீபகாலமாக தான் அவரைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றன. அவரைக் கிண்டல் செய்வதால் என்ன பெரிசாக சாதிக்கப் போகிறீர்கள்?
பழைய வண்ணாரப்பேட்டை படம் எனக்கு சரியாகப் போகாததால் திரௌபதி படத்தில் ரிச்சர்ட் ரிஷி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன். நான் எப்போதும் நன்றி சொல்ல மறந்ததே இல்லை.
நான் அவருக்கு நன்றியோடு இருக்கும்போது நீங்கள் ஏன் சூப்பர்ஸ்டாருக்கு நன்றியோடு இல்லாமல் இருக்கிறீர்கள்…? அது தான் உங்கள் சுபாவம். தயவு செய்து இனி அப்படி இருக்காதீங்க. அது ரொம்ப தப்பு. அவர் இல்லைன்னா நீங்க ஒண்ணும் கிடையாது. இந்த இடத்துக்கு வந்து இருக்கவே முடியாது என்று காட்டமாக பேசியுள்ளார்.