மன்சூர் அலி கானுக்கு விஷம் வைத்து கொல்லப் பார்த்தார்களா?.. ஐசியூவில் அட்மிட் ஆக அதுதான் காரணமா?

நடிகர் மன்சூர் அலி கான் நாளை நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் மன்சூர் அலி கான் அதற்காக கடந்த சில நாட்களாக வேலூரை சுற்றியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

மருத்துவமனையில் மன்சூர் அலி கான்:

நேற்று குடியாத்தம் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பாலாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து வந்த மன்சூர் அலி கான் ஜனநாயக புலிகள் கட்சி எனும் அரசியல் கட்சியும் நடத்த வருகிறார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் இன்னமும் அனுமதியை வழங்காத நிலையில் இந்த முறை நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் திரிஷா நடித்து வெளியான லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலி கான். அடுத்ததாக தான் ஹீரோவாக நடித்த சரக்கு படத்தின் புரமோஷனுக்காக நடிகை திரிஷா பற்றி மன்சூர் அலி கான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஜூஸில் விஷம்:

லியோ படத்தை டபுள் டக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மன்சூர் அலி கான் இந்தத் தேர்தலில் தீவிரமாக ஆம்பூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று மதியம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு சிலர் வலுக்கட்டாயமாக ஜூஸ் மற்றும் மோர் கொடுத்ததாக தற்போது அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார் மன்சூர் அலி கான்.

அந்த ஜூஸ் மற்றும் மோரை குடித்த பின்னர் தான் காரில் ஏறும்போது தடுமாறி விழுந்து விட்டேன் என்றும் விஷம் வைத்து தன்னை கொல்ல சதி நடந்ததாக தனது பிஆர்ஓ மூலமாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்ட தனக்கு விஷ முறிவு மருந்து கொடுத்த பின்னர் தான் உயிரே வந்தது என்றும் இன்று மதியம் நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவேன் என்றும் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...