தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கியமான சில கதாபாத்திரங்களை செய்தவர் நடிகர் டி.ஆர்.கே கிரண். காப்பான், வேதாளம், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் சமீபத்திய பதிவு சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை துவைத்து எடுப்பவர்களை பற்றியதாக உள்ளது.
விமர்சன விரும்பிகளே.. உங்களால் ஒரு படம் ஒட வில்லை என்றாலும் பரவாயில்லை.. ஆனால் சினிமாவை அழிவை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் சினிமாவை தவிர பிழைக்க வழி இல்லாமல் வாழ்பவர்கள் இங்கே ஏராளம் .
70% நல்ல படமாக இருந்தும்.. மனசாட்சியே இல்லாமல் விமர்சனம் என்ற பெயரால் படுகுழியில் தள்ளும் கொடுமை தமிழ் திரைப்படங்களிலே அதிகமாக காணப்படுகிறது.. உலகிலே சுலபமானது விமர்சனம் செய்வது . இது ஒருவகையில் ஒருவன் சோற்றில் மண்னை போடுவது போல தான் என தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.