தீபாவளி வெற்றிப்படங்கள்- ரமணா ஒரு பார்வை

By Staff

Published:

கடந்த 2002ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த திரைப்படம் ரமணா. இந்த படத்திற்கு முன் ஏ.ஆர் முருகதாஸ் அஜீத் நடித்த தீனா படத்தை மட்டுமே இயக்கி இருந்தார். தீனா படம் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் மிகப்பெரிய இயக்குனராக அவர் அந்த நேரத்தில் பலரால் அறியப்படவில்லை. ஆனால் தீனா பட வெற்றியால் திறமையான இயக்குனராக அறியப்பட்டிருந்தார்.

e8d096a35138a08795b2fa35a827c717-1

இரண்டாவது படத்திலேயே முருகதாஸ்க்கு விஜயகாந்த் ஹீரோ, இளையராஜா இசை, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பு என பிரமாண்ட கூட்டணி அமைந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2002 தீபாவளி அன்று இப்படம் ரிலீஸ் ஆனது பலத்த எதிர்பார்ப்பை படம் வருவதற்கு முன்பே இப்படம் ஏற்படுத்தினாலும் ரிலீஸ் அன்று பரபரப்பு அடங்கி போனது. காரணம் தீபாவளியன்று தல , தளபதி நடித்த வில்லன், பகவதி படங்கள் ரிலீஸ் ஆனதுதான் இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அஜீத், விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால் இப்படங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டது எழுதப்பட்டது. அதன்படியே இந்த இரண்டு படங்களுக்கும் அதிக கூட்டம் சென்றது.

முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு ரமணாவின் ரன் ரேட் எகிறியது என சொல்லலாம். படம் பார்த்தவர்கள் படத்தில் வரும் ஹாஸ்பிடல் சீனை எல்லாம் சிலாகித்து சொல்ல ஹவுஸ்புல் ஃபோர்டு மாட்டுமளவிற்கு இப்படத்துக்கு கூட்டம் எகிறியது என சொல்லலாம்.

இன்று வரை இப்படம் காலத்தால் அழியாத படமாக உள்ளது. தீபாவளிக்கு வந்த படங்களில் இது ஒரு சிறப்பான படமாகும்.

Leave a Comment