குருப்பெயர்ச்சி விழா- பட்டமங்களம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில்

By Staff

Published:

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 29ம் தேதி அதிகாலையில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜென்ம குருவாக குரு பெயர இருக்கிறார்.

880938da1058f385aaa64fecab20e8e7

இந்த குருப்பெயர்ச்சி சிலருக்கு நல்லதாக இருந்தாலும் சரி பாதகமாக இருந்தாலும் சரி, நல்லவையாக இருப்போர் அந்த பலன்களை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ளவும், பாதகமாக இருப்போர் அதில் இருந்து காக்கவும் குருபகவான், மற்றும் சிவன் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை விரதம் இருந்து வணங்கி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பட்டமங்கலம் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா களை கட்டுகிறது. இங்கு உள்ள அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி வணங்குபவர்களுக்கு வரங்களை அருளுபவர்.

இந்த கோவில் 1000 ஆண்டு பழமையானது.இயற்கையிலே அஷ்டமாசித்திகள் பெற்ற கார்த்திகை பெண்கள், சாபத்தால் கற்பாறைகளாக ஆயினர். அவர்களுக்கு சாப விமோசனம் அளித்த சிவன் அவர்களை மீண்டும் எழுப்பி உபதேசம் செய்த ஸ்தலம் மீண்டும் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்கையில் நவயடிக்காளி அவர்களின் கோர உருவம் நீக்கி அழகு சௌந்தரியாக ஆட்கொண்டார்.

பட்டமங்கலம் அழகு சௌந்தரி. கற்பாறைகளான அம்பா, துலா, நிதர்த்தினி, அபரசேந்தி, மேகந்தி, வர்தயேந்தி கார்த்திகை பெண்களுக்கு சாப விமேசனமளித்து அஷ்டமா சித்தி வழங்கிய கிழக்கு நோக்கிய தட்சிணா மூர்த்தி இங்கு இருப்பது சிறப்பு. 

இங்கு குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடப்பது சிறப்பு. சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி திருக்கோஷ்டியூரில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் பஸ்களில் பட்டமங்கலம் கோவிலுக்கு செல்லலாம்.

காரைக்குடியில் இருந்தும் திருப்பத்தூர் சென்று அங்கிருந்து பட்டமங்கலத்திற்கு பஸ்களில் செல்லலாம்.

Leave a Comment