அஜித்தின் ’வலிமை’ படத்தில் தீபிகா படுகோன் நாயகியா?

By Staff

Published:

941f1d7afc140ab1c95bf1964a8e1d10-1

அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது. தொடர்ச்சியாக 60 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாளில் படக்குழுவினர் ஹைதராபாத் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்றும் மற்றும் ஒரு சில நடிகைகள் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’வலிமை’ படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் போனிகபூர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

போனிகபூர் மீது இருக்கும் மரியாதை காரணமாக தீபிகா படுகோனே ’வலிமை’ படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் மீண்டும் போலீஸ் வேடம் ஏற்று நடிக்கும் இந்த படத்தில் கார் ரேசிங், மோட்டார் சைக்கிள் ரேஸ் உள்பட முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் என்றும் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment