ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் டெடி. இந்த படத்தை இயக்குபவர் சக்தி செளந்தர்ராஜன் . இவர் முதன் முதலில் பிரசன்னாவை வைத்து நாணயம் படத்தையும் சிபிராஜை வைத்து நாய்கள் ஜாக்கிரதை படத்தையும் ஜெயம் ரவியை வைத்து டிக் டிக் டிக் மற்றும் மிருதன் படங்களையும் இயக்கியுள்ளார்.
நன்கு ஆழமான கதைகளையும் விஞ்ஞானம் கலந்த கதைகளையும் ஹாலிவுட் பாணியிலான கதைகளையும் இயக்குவதில் இவர் வல்லவர்.
இவர் இப்போது ஆர்யா நடிப்பில் டெடி என்ற படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.