சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு செலவு 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஏ.எல்.விஜய் இந்த படத்திற்காக தினமும் 17 லட்ச ரூபாய் படப்பிடிப்பிற்கு செலவு செய்வதாக தகவல்கள் வருகின்றன
பெரும்பாலும் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனா ரனாவத்துக்குத்தான் செலவுதான் அதிகம் என்று கூறப்படுகிறது. அவருடன் வரும் மேக்கப்மேன்கள், சிகை அலங்கார கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களை சம்பளமே தினசரி ஆறு லட்ச ரூபாய் என கூறப்படுகிறது
அதே நேரத்தில் அரவிந்தசாமி தன்னுடன் யாரையும் அழைத்து வராமல் தனியாக வருவதாகவும் அவரால் படக்குழுவினர்களுக்கு எந்த அதிகப்படியான செலவும் இல்லை என்றும் கூறப்படுகிறது ரஜினி படத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் ’தலைவி’ திரைப்படம் அந்த அளவிற்கு வசூலை பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்