சிம்பு, மகத், வெங்கட் பிரபு இணையும் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Staff

Published:


61febf0a450ec5ae6df693a129256192

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் டெக்னீசியன் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

இந்த நிலையில் சிம்பு, மகத் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒரு படத்தை மக்வென் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடிக்கவிருப்பதாகவும் மேலும் முக்கிய வேடத்தில் மனோபாலா, மாகபா ஆனந்த் உள்ளிட்ட ஒருசிலர் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற விவரங்கள் குறித்த தகவல் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது

Leave a Comment