தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த ’அசுரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தனுஷின் படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதில் தெலுங்கில் தற்போது ’நாரப்பா என்ற பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ், மஞ்சு வாரியர் கேரக்டரில் பிரியாமணி நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரான அம்மு அபிரமி நடித்த கேரக்டரில் தற்போது அமலா பால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
அமலாபாலுக்கு தெலுங்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவர் இந்த படத்தில் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அடுத்த வாரம் நடைபெறும் படப்பிடிப்பில் அமலாபால் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.