ரஜினிகாந்த் 1996முதல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருந்ததாக சூசகமாக சொல்லி வருகிறார். அதை தனது திரைப்பட பாடல்களிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
இருந்தாலும் நீண்ட நாட்களாக இவர் கட்சி ஆரம்பிக்காமல் இழுத்து வருவதை பல வருடங்களாக பலரும் கலாய்த்துதான் வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பே இதை பற்றி ஒரு அறிவிப்பு வெளியிடுவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் நேற்றும் இவர் நிர்வாகிகளை சந்திக்கிறார் என்று தகவல் வெளியானது. நேற்று நிர்வாகிகளை சந்தித்த ரஜினி இந்த முறையும் யாரும் எதிர்பார்க்கும்படியான பதிலை தரவில்லை. நேற்று கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று காத்திருந்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் டுவிட்டரில் இது போன்ற ஒரு படம் உலா வருகிறது. இதில் ரஜினி ரசிகர்களை சந்திக்கும் புகைப்படத்தில் ரஜினி ரசிகர்கள் பலர் வயதாகி தலை முடி இழந்து வழுக்கையாக காட்சி தருகின்றனர். 1996ல் இவர்களுக்கு முடி இருந்தது போல் அப்போ இருந்து இப்படித்தான் என்ற வகையில் யாரோ ஒருவர் போட்டோ ஷாப் செய்து உலவ விட்டுள்ளனர்.