தூத்துக்குடியை அதிரவைக்கும் கொரோனா- இழுத்து மூடப்பட்ட ஆஸ்பத்திரி

By Staff

Published:

உலகமெங்கிலும் கொரோனா நோய் தலையை விரித்து போட்டுக்கொண்டு திங்கு திங்குனு ஆடுகிறது என சினிமா காமெடி போல தாராளமாக சொல்லலாம். அந்த அளவுக்கு பல வறியவர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும், தெருவோர மனிதர்கள் ஆடு, மாடுகள், கோழி நாய்கள், என யாருக்கும் எந்த உணவும் கிடைக்க விடாதபடி பல துன்பத்தை கொடுத்து வருகிறது.

663804784fc5b0b96ebd580f2a4e4cf2

உலகமெங்கிலும் கொரோனா அதிரடி காட்டி வந்தாலும் இந்தியாவில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என தாராளமாக கூறலாம். மற்ற உலக நாடுகள் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் இந்தியாவிலும் பாதிப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல்,ஈரோடு, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அங்கு உள்ள மிகப்பெரிய ஹாஸ்பிடல் என்று அழைக்கப்படும் பிரதான ஏவிஎம் ஹாஸ்பிடல் இழுத்து மூடப்பட்டுள்ளது, காரணம் இங்கு வேலை பார்க்கும் லேப் டெக்னீசியன் ஒருவருக்கு கொரோனா தொற்று வந்ததே இதற்கு காரணம்.

தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் அவர் போல்டன்புரத்தில் உள்ள காய்கறிகடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பரப்பி அதன் மூலம் அந்த பெண் தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனையில் பணிபுரியும் அவரது மருமகளுக்கு பரவியுள்ளது.

லேப் டெக்னீசியனுடன் பணிபுரிந்த 6 பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment