ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த் ஸ்கூலுக்கே போறது இல்லையாம்- ஆச்சரியதகவல்

By Staff

Published:

உலகையே ஒரு வைரஸ் நிலைகுலைய செய்யும் அது டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை பல நாடுகளை நிலைகுலைய செய்துவிட்டுத்தான் ஓயும் என ஆகஸ்ட் மாதத்திலேயே கணித்தவர் சின்ன சிறுவனான அபிக்யா ஆனந்த் என்ற ஜோதிட சிறுவன்.

இவருக்கு தற்போது வயது 14. அபிக்யாவின் அப்பா பணிபுரியும் கம்பெனி வேலைக்கு ஏற்ப ஒவ்வொரு நாடாக செல்ல வேண்டிய சூழ்நிலை அபிக்யாவுக்கு படிப்பில் நாட்டமே இல்லையாம்.

ஜெர்மன், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என எல்லா நாட்டிலும் இவர்கள் வசித்து வந்துள்ளார்கள். எல்லா நாட்டிலும் தான் படித்த ஸ்கூலில் படிப்பில் கவனம் இராமலேயே இருந்துள்ளார் அபிக்யா.

அவரின் அம்மா அனுவோ அவரை படிக்க வைக்க தீவிர முயற்சி எடுத்தும் அவர் சேர்க்கப்பட்ட எல்லா ஸ்கூலிலும் அவருக்கு படிப்பில் கவனம் இல்லாமல் வேறு ஏதோ சிந்தனையில் இருக்க எல்லா பள்ளி ஆசிரியர்களும் ஒன்று சொன்னாற்போல் அபிக்யாவுக்கு படிப்பில் கவனம் இல்லை என கூற , அபிக்யாவுக்கு ஹோம் ஸ்கூல் என்ற சிஸ்டத்தை கொண்டு வீட்டிலேயே பாடம் நடத்தி வருகிறாராம் அவரின் தாய் அனு.

இரண்டாம் வகுப்புடன் ஸ்கூலை விட்டு நின்ற அபிக்யா அசாத்திய அறிவுடன் ஜோதிட அறிவியலை உள்வாங்கி அதற்குரிய பலன்களை சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment